
நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது முன்னாள் காதலனினால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே காவல்துறையினரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார்.
இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற இடத்தில் குறித்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டுக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 30 வயதான வரதராஜன் ராகவி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த பெண்ணின் முன்னாள் காதலன் நோர்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி கைது செய்யப்பட்ட நோர்வே இளைஞரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நோர்வே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.