உடனடியாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்!

சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற முறையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நீதிமன்றில் தாக்கல் செய்ததாகவும், மதிப்பிடப்பட்ட நீர்மின் உற்பத்தியின் அளவு (3,750 முதல் 4,510 ஜிகாவொட்) அதிக உற்பத்தி சுட்டியை எட்டியமை, மின்சாரத் தேவை குறைவு (400 ஜிகாவொட்) மற்றும் அனல்மின் நிலைய செயலிழப்பு போன்றவற்றால் 26 பில்லியன் மற்றும் 18% மின்கட்டண அதிகரிப்பால் மேலும் 26 பில்லியன் உட்பட இதன் மொத்தம் 52 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் உடனடியாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மனுவின் மூலம் அரசாங்கம் இது குறித்த விடயத்தில் செயற்படாத விடுத்து,கனம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் இந்த இலாபத்தை மின் பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததோடு, இதுவரையில் 8 இலட்சம் மக்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

52 பில்லியனை இலாபமாக பெற்றிருக்கும் நேரத்தில் இதன் பலன் மின் பாவனையாளர்களுக வழங்கப்பட வேண்டும் என்றும், மின் கட்டணத்தைக் குறைக்கும் எந்த வித திட்டமும் மின்சார சபையிடம் இல்லை என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூட கூறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews