

அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ்,தீவகம் வேலணை மேற்கு,சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா (பிரான்ஸ்)அவர்களின் நிதி ஏற்பாட்டில், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இவ்வாறு பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்னம் அவர்கள் தலமையில் அதன் நிர்வாக சபை உறுப்பினர்களான இ.மயில்வாகனம், பொறியியலாளர் சா.தவசங்கரி, ஓய்வு நிலை வங்கி முகாமையாளர் ய.தேவதாஸ் ஆகியோர் நேருல் சென்று குறித்த பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
இதேவேளை கடந்த 07/01/2024 அன்று பூமணி அம்மா அறக்கட்டளையினரால் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கும் இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிட தக்கது.
