சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் சிலர் இன்றிரவு(10) நாட்டிற்கு வருகைதரவுள்ளனர்.
நாளை(11) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் இதுவரையான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் பிரதான நோக்கமாகும்.