`தமிழரசுக் கட்சிக்கு போட்டி இல்லாத தலைவர்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை சம்பந்தன், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மேலும், “கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி எவ்வாறு பலமாக இருந்ததோ அதே போன்ற நிலைமை தொடர வேண்டும். நாம் தொடர்ந்தும் பலத்துடன் இருக்க வேண்டும். கட்சிக்குள் போட்டிகள் வந்தால் அது கட்சியையும், உறுப்பினர்களையும் பலவீனப்படுத்தும்.” என சம்பந்தன் கூறியதாகவும் சிறீதரன் தெரிவித்தார்.நேரில் சந்தித்து தனக்கு தெரிவித்துள்ளதாக சிறீதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியின் தேசிய மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும். இந்நிலையில், புதிய தலைவர் தெரிவு போட்டி இல்லாமல் நடைபெறும் நிலைமையை ஏற்படுத்த முடியாதா?”  என்று வினவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு “நாளை உங்கள் வீட்டில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறும்தானே ஐயா. அதில் இது தொடர்பில் தீர்மானம் எடுப்போம்” என தான் பதிலளித்ததாகவும் சிறிதரன் கூறியுள்ளார்.தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்குக் கொழும்பில் உள்ள சம்பந்தன் இல்லத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews