
கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் கௌரவ ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பசுமை சக்திவள திட்டங்கள் , பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
