நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தனது உடை தொடர்பான நடைமுறைகளை மீறியதற்காக நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை நேற்றையினம் (10.01.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே விதிக்கப்பட்டுள்ளது.
சமையற்காரர்கள் அணியும் கவசத்தை அணிந்து அவர் வந்திருந்ததாக சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கறுப்பு உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டள்ளனர்.
எனினும் தம்மிடம் கறுப்பு சட்டை மற்றும் கால்சட்டை எதுவும் இல்லை என்பதால் இந்த உடையில் வந்ததாக அவர் விளக்கமளித்துள்ளார்