
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (10.01.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில்இ சம்பவம் தொடர்பாக இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படை இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடும் காவலரணிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.