
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (11) மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பியும் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது