
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் காயங்களிற்குள்ளாகினர்.
குறித்த விபத்து நேற்று (11) இரவு 10 மணியளவில் முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்துள்ளது.
அதே திசையில் பயணித்த ரிப்பர் வாகனம் பேருந்தின் பின்னால் மோதியுள்ளது. சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான பயணிகள் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.