இலங்கையில் பரவிவரும் டெல்டா கொவிட் திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்திர தமது ட்விட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 701- S என்ற வைரஸ் திரிபின் உப பிறழ்வானது AY28 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பரவலடைந்து வரும் டெல்டா உப பிறழ்வின் விஞ்ஞான பெயராக B1 617 2.28 என அடையாளம் காணப்பட்டுள்ளது.