
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 123 குடும்பங்கங்களுக்கான ரூபா 615,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் நேற்று முன்தினம் 10/01/2024. வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதில் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாமூலை – கிராமசேவையாளர் பிரிவில் 52 குடும்பங்களுக்கும்,
வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்புளியங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் 35 குடும்பங்களுக்கும், கணேசபுரம் கிராமசேவையாளர் பிரிவில் 36 குடும்பங்களுக்குமே உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த உலர் உணவு நிவாரணத்தை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், தொண்டர்கள், சமூக செயற்பாட்டாளர் இ. தயாபரன், கோவில் புளியங்குளம் கிராமசேவகர் சர்வேந்திரன், முன்னாள் வெங்கல செட்டிக்குளம்
பிரதேச சபை தவிசாளர் வெங்களசெட்டிகுளம் சு.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் ம.சுஜேந்நிரன் ஆகியோர் சென்று வழங்கிவைத்தனர்.
