துபாய், ஈராக்கில் இருந்து துருக்கிக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற சரக்கு கப்பல், ராணுவ உடை அணிந்த உடை அணிந்த அடையாளம் தெரியாத நபர்களால், ஓமன் வளைகுடாவில் வைத்து நேற்று கடத்தப்பட்டதாக, பிரிட்டன் ராணுவ ஆலோசனை குழு எச்சரித்துள்ளது…
மேற்காசிய நாடான ஈராக்கின் பஸ்ரா நகரத்தில் இருந்து, துருக்கியின் அலியாகாவில் உள்ள எண்ணெய் ஏற்றிக் கொண்டு, செயின்ட் நிகோலஸ் என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது…
மத்திய கிழக்கு கடல் பகுதியில் உள்ள ஓமன் வளைகுடாவை நேற்று கடந்து செல்கையில், ராணுவ உடையுடன் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத ஆறு மர்ம நபர்கள் கப்பலில் ஏறினர்…
இவர்கள் கப்பலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை மறைத்தனர். அதன் பின் கப்பலில் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது….