
யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேசசெயலகத்தின் சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாளாந்த கடமைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகள் 28 பேருக்கான பொங்கல் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வசிக்கும் திருமதி முத்துப்பிள்ளை தம்பிப்பிள்ளையின் ஞாபகார்த்தமான கனகம்மா அறக்கட்டளையினரின் நிதி உதவிலேயே குறித்த பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கை தலைவர் K.பாலகிருஷ்ணன், கரவெட்டி பிரதேச செயலக உதவிபிரதேச செயலர் சிவகாமி உமாகாந்தன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க கரவெட்டி பிரிவு தலைவர் சி.ரகுபரன் செயலாளர் த.பகிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பானைகளை வழங்கிவைத்தனர்.
