சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
சாதகமான ஆரம்பத்துடன் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சவாலான மறுசீரமைப்புகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஆசியாவின் முன்னோடியாக மாறி, ஆட்சியை கண்டறியும் அறிக்கையை வெளியிட்டமைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் சபைக் கூட்டத்தில், அதன் பணிப்பாளர்கள் இலங்கைக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று முன்தினம் (11) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.