விஜயதாஸ போன்ற இனவாதிகளே இன ஒற்றுமைக்கு  தடையானவர்கள் – சபா குகதாஸ்

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அண்மையில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவைப்  பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தமிழர்களின் சாபக்கேடு என இனவாதத்தை வாரி இறைத்துள்ளார். இதன் மூலம் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச நீதித்துறைக்கு பொருத்தமான அமைச்சரா என்ற கேள்வி எழுந்துள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
விஜயதாஸ போன்ற பச்சை இனவாதம் பேசும்  பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதிகளினால் இந்த நாடு பிச்சா பாத்திரம் ஏந்தி நிற்கின்றது என்ற வரலாற்றை இலகுவில் இந்த நாட்டை நேசிப்பவர்கள் மறந்து விட முடியாது. விஜயதாஸ  போன்றவர்களே இலங்கைத் தீவின் சாபக்கேடு இனமுறுகலை கொதிநிலையில் வைத்து அரசியல் அதிகாரத்தைப் பெற நினைப்பவர்கள் இதனை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.
நல்லாட்சி என்ற பெயர்ப்பலகை ஆட்சியில் இதே விஜயதாஸ நீதி அமைச்சராக இருந்து என்ன செய்தார் என்பதை இந்த நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கம்  என்ற நாடகத்தை ஆடி இனங்களிடையே முரண்பாட்டை அதிகரித்தவர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற கொடிய சட்டத்தை கொண்டுவர பகீரத பிரையத்தனம் செய்தவர் நாட்டில் உள்ள மூவின மக்களையும் நீதியாக மதிக்கத் தெரியாத கடும் போக்குவாத  பௌத்த இனவாதி. உண்மையில் அந்த காலப் பகுதியில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் அதற்கு தடையாக இருந்த பெரும் பங்கு அமைச்சர் விஜயதாஸவுக்கு உண்டு
தற்போதைய ஆட்சியில் நீதி அமைச்சராக இனவாத சிந்தனையுடன் இருப்பதால் சிங்கள மக்கள் தவிர்ந்த ஏனைய இனங்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை மக்களின் ஐனநாயகம்  நீதி போன்றவற்றை புறம் தள்ளியே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் , நிகழ்நிலைக் காப்புச் சட்டமும் திணிக்கப்படுகின்றன எனவே விஜயதாஸ போன்ற இனவாதிகளே இலங்கைத்தீவின் இன ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் சாபக்கேடுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews