உலக நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் கடந்த கால செயற்பாடுகளை தமிழக அரசு அவதானித்து அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அயலக தமிழர் மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பட்டியலில் கிழக்கு மாகாண ஆளுநரும்,இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமான் இடம்பிடித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் 11,12 இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் அயலக தமிழர் மாநாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ் மஸ்தான், அயலக்ஸ் தமிழர் நல வாரியம் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பொது மற்றும் மறுவாழ்வு துறை அரசு செயலாளர் க. நந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.