ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம் நூல் வெளியீடு சிற்பாக இடம்பெற்றது

ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம் சூழலியல் கட்டுரைகளின்
தொகுப்பு நூல் வெளியீடு கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று
(13.01.2023) பிற்பகல் 3 மணிக்கு காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் வண.
அருட்தந்தை ரி.எஸ்.யோசுவா  அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
வாழ்த்துரையினை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளாரும், யாழ் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளருமான த சத்திமூர்த்தியும், வரவேற்புரையினை
ஆசிரியர் ப. தயாளனும், நூல் அறிமுக உரையினை கவிஞர் கருணாகரனும்
ஆற்றினார்கள்.
தொடர்ந்து நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது நூலினை நூலாசிரியரின்
பெற்றோர்கள் வெளியிட்டு வைக்க சமூக சேவையாளரும், தொழிலதிபதிருமான
ந.சிவகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து சிறப்பு
பிரதிகளும்  வழங்கி வைக்கப்பட்டன.  இதனையடுத்து நூல் ஆய்வுரைகள்
இடம்பெற்றன.  யாழ் பல்கலைகழக கலை பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம்
அவர்களும், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்களும் நூல் ஆய்வுரையினை
வழங்கினார்கள். நிறைவாக நூலாசிரியர் மு. தமிழ்ச்செல்வனின் ஏற்புரை
மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுப்பெற்றது.
இந்த நிகழ்வில் சூழலியலாளர்கள்   பாடசாலைகளின் அதிபர்கள்
ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பொது மக்கள் என பெருமளவானவர்கள் கலந்கொண்டு
சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews