நாட்டின் அடுத்த தலைவர் கோமாளியாக இருக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
சீரழிந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் உடைய தலைவர் ஒருவரே தேவை என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மட்டுமே உண்டு என தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை இழிவுபடுத்தி விமர்சனம் செய்தவர்கள் இன்று அதற்கான விளைவுகளை அனுபவித்து வருகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.மக்கள் தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியை சுற்றி அணிதிரண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பாரிய பிரச்சினையாக வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.