இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் 1 கிலோகிராம் பால் மாவின் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.
15% முதல் 18% வரையிலான VAT அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மன்றத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்திருந்தார்.