தமிழ் மக்களிற்கு தேவை கதிர்காமர் போன்ற சட்ட புலமையாளர்கள் அல்ல, தமிழ் அரசிற்கு தேவை அம்மா பூபதி போன்ற தியாகிகளே…! விசரன்.

இலங்கை தமிழரசு கட்சிக்கான தலமையை தெரிவு செய்வதற்க்கான ஜனநாயக ரீதியான தேர்தல் எதிர்வரும் 28. ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தலமைக்காக போட்டியிடும் மூவர் தொடர்பிலும் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றுவருகின்றன.

இலங்கை தமிழரசு கட்சி என்பது விடுதலைப் புலிகள் பல்வேறு விட்டுக் கொடுப்புக்களை செய்து தமிழ் தேசிய விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்து போராடிய இயக்கங்கள், கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவாக்கும் வரை அதன் பெயர் அடிபட்டே போயிருந்தது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய பின்னர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானங்கள் எட்டப்பட்ட நிலையில் அச்சின்னம் தமிழர் விடுதலை கூட்டணிக்குரியது என தமிழர் விடுதலை கூட்டணி பொதுச் செயலர் ஆனந்தசங்கரி அடம்பிடிக்க பின்னர் மக்களால் 1970 களில் நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் சின்னமான வீட்டு சின்னத்தை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டியிடுவதென முடிவாகியே அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு விடுதலைப் புலிகளின் அனுசரணையோடு வெற்றிகளை ஈட்டிவந்தனர். 2009 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 2010 ம் ஆண்டில் இடம் பெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர்.

தமிழ் மக்களிற்க்கு தனி ஈழமே தீர்வு என சொல்லி அப்போது இளைஞர்களை ஆயுதம் ஏந்தி போராட செய்து பல்லாயிரம் போராளிகள் , இறப்பதறக்கும், மக்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்த சம்மந்தன் போன்றவர்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கி தமிழ் மக்களின் விருப்பம் இல்லாத, எந்தவிதத்திலும், தமிழரின் விடுதலைக்கான அடிப்படையை கொண்டிராத இலங்கை இந்திய அரசுகளால் கொண்டு வரப்பட்ட ஒன்றை ஆட்சி கட்டமைப்பை கொண்ட, அதேவேளை ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களான காணி, காவல்துறை அதிகாரங்கள் மத்தியால் பிடுங்கப்பட்ட 13 ஐ தமிழ் மக்களிற்கு தீர்வாக கோரி இலங்கையின் பெருந் தேசிய வாதத்துடன் ஒத்தூதல்கள், மற்றும் இணக்க அரசியலிற்க்கு சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்து ஒற்றுமையாக செயற்பட்டவர்களை சிதைத்து தமிழ் தேசிய நலனை புறந்தள்ளி இலங்கை தமிழ் அரசு கட்சியாக அதனை நிலை நிறுத்தும் முயற்சிகளில் சம்மந்தன், சுமந்திரன் செயற்பட்டு தமிழ் இனத்தின் ஒன்றிணைவை சிதைத்த அதே கட்சிக்கே அதன் தலமையை தெரிவு செய்வதற்க்கான தேர்தல் இடம் பெறவுள்ளது.

இதேவேளை தமிழ் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்துடன் எந்தவித்திலும் சம்மந்தப்படாத , தமிழ் இனம் சார்ந்து பாதிக்கப்படாத தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் உடன் படாத இலங்கை தேசிய வாதத்தை முன் நிறுத்துகின்ற சுமந்திரனும், தமிழ் தேசியத்தில் ஓரளவேனும் உரருதியாக இருக்கின்ற சிவஞானம் சிறிதரனும் , சீனித்தம்பி யோகேஸ்வரனும் போட்டியிடுகிறார்கள்,

இலங்கை தமிழ் அரசு கட்சி சின்னமான வீட்டு சின்னத்திற்க்கோ அல்லது தலைவர் காட்டிய சின்னம், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கோ வாக்களித்த மக்கள் தமது தமிழ் தேசிய இருப்பிற்க்காக இவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதே.

இலங்கை தமிழரசு கட்சி என்பது சமஸ்டி கட்சியே, இது ஒற்றை ஆட்சியையோ இணக்க அரசியலையோ ஏற்றுக்கொள்ளாத ஒரு கட்சி, இணக்க அரசியல் தமிழருக்கு ஒருபோதும் சாத்தியமாகாது என பட்டுணர்ந்த கட்சி, அதன் நிலைப்பாடு தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய, பெறப்பட்ட அதிகாரங்களை மத்தியால் மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலைத்து நிற்க்கக் கூடிய இறமை உள்ள ஒரு தீர்வை அடைவதே அதன் இலக்காகும்.

இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருக்கின்ற தள்ளாடும் வயதிலுள்ள, சுயாமக எழுந்து நடக்கவே முடியாத 60 க்கு மேற்பட்ட தம்மை இப்போதும் இளையர்கள் என நினைத்துக் கொண்டிருக்கும், விடுதலை புலிகள் தோற்கடிக்கபட்ட பின்னர் தமிழ் இனம் நடுத்தெருவிற்க்கு வந்துள்ளதாக தமிழ் மக்களின் சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஜனநாயக அரசியலை அறியாத வெறும் சட்டம் படித்தவர்களால் தான் தமிழரசு கட்சிக்கு தலைமை தாங்க முடியுமென நம்பிக் கொண்டிருப்பவர்கள், திரை மறைவில் அங்கிலிகன் திருச்சபையை சேர்ந்தவரான தமிழ் இனத்தின் மீது பற்றில்லாதவரை தலமைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் முன்னின்று செயற்படும் தமிழரசு கட்சியின் மத்திய. செயற்குழு உறுப்பினர்களான குலநாயகம் போன்றவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உண்மையில் சட்டப்புலமை என்பது முக்கியமற்றது என்றல்ல, இலங்கையில் கதிர்காமர் ஒரு சட்ட மேதை, அவரது சட்ட புலமை தமிழ் மக்களை அழித்தொழித்து தமிழ் இன விடுதலையை சிதைத்து சின்னாபின்னமாக்கியது. இவ்வாறான சட்டப் புலமையாளர்கள் தலமையாக உருவாகி விடுவார்களோ என்கிற பயமே எம்மை ஆட் கொள்கின்றன. மாறாக அம்மா அன்னை பூபதி போன்ற தியாகிகளே எமக்கு தேவை.

உண்மையில் சுமந்திரன், சிறிதரன் யோகேஸ்வரன் ஆகியோரில் எமக்கு தனிப்பட்ட எந்த அக்கறையும் கிடையாது. அல்லது உறவும் கிடையாது.

எதிர்காலத்தில் இனத்தின் இருப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளவர்களாக நாம் இந்த கருத்துக்களை முன்வைக்கின்றோம்.

தமிழ் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்தக் கூடிய, தமிழ் தேசியத்திற்க்காக அனைவரையும் ஒன்றிணைத்து இன விடுதலையை வென்றடுக்கும் ஒரு தலைவரே தேவையே ஒளிய, சாணக்கியன், குலநாயகம் போன்றவர்கள் சொல்வது போன்று சட்டப்புலமைதான் இனத்திற்க்கும் இனத்தின் இருப்பையும் பாதுகாக்கும் எனில் தமிழ் இனத்தை தந்தை செல்வநாயகம் சொன்னது போன்று தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்பது தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலையே உருவாகும்

இலங்கை தமிழ் அரசு கட்சி வடக்கு கிழக்கில் ஒரு பலமான கட்டமைப்பை கொண்ட ஒரு கட்சி மட்டுமல்ல, தந்தை செல்வநாயகம் போன்ற பெருந்தலைவர்கள் உருவாக்கிய கட்சி, இந்நிலையில் வெறும் கட்சி நலனை மட்டும் சிந்திக்காமல் தமிழ் இனத்தின் நலனை முன்னிறுத்து தமிழ் மக்களிற்க்காக தன்னை அர்ப்பணத்து சம்மந்தன் சுமந்திரனால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை மீன ஒன்றாக்கி உண்மையாக இனத்தின் நலனிற்க்காக செயலாற்றக் கூடிய ஒரு உண்மையான நேர்மையான தலைவரை தெரிவு செய்யுங்கள்,

மாறாக புலமையாளர்கள் என்பதற்க்காக தவறானவர்களை தெரிவு செய்து மேலும் எமது இனத்தின் இருப்பை அழிக்கின்ற வரலாற்று துரோகத்தை தயவு செய்து இளைக்காதீர்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews