மேஷம் -ராசி: _*
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஓவியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒப்பனை துறையில் மேன்மை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.
அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.
பரணி : ஒத்துழைப்பு மேம்படும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் ராசி: _*
எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சமூக நிகழ்வுகள் மனதளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். உயர் கல்வி தொடர்பான குழப்பம் விலகும். குடும்பத்தில் பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரப் பணிகளில் வேலையாட்களுடன் பொறுமையை கையாளவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
கிருத்திகை : முதலீடுகள் அதிகரிக்கும்.
ரோகிணி : குழப்பங்கள் விலகும்.
மிருகசீரிஷம் : பொறுமையை கையாளவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம் -ராசி: _*
சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாஸ்திர சடங்குகளை பற்றிய புரிதல் உண்டாகும். தொழில் வழியில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தர்ம காரியத்தில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பங்காளி வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவாதிரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் -ராசி: _*
உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெளியூர் சார்ந்த வர்த்தகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். அரசு சார்ந்த வழியில் அலைச்சல் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : அலைச்சல் ஏற்படும்.
ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் -ராசி: _*
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூரிலிருந்து புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.
மகம் : ஆசைகள் உண்டாகும்.
பூரம் : வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி -ராசி: _*
எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் குறையும். வழக்கு விஷயத்தில் சாதகமான முடிவு ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப பெரியோர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.
உத்திரம் : வரவு உண்டாகும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் -ராசி: _*
பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் முயற்சிகள் ஈடேறும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். தடைகளை சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.
சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
சுவாதி : வெற்றிகரமான நாள்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம்- ராசி: _*
பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். தாய்வழி உறவுகளின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். வரவுகளால் நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.
விசாகம் : பொறுமையை கடைபிடிக்கவும்.
அனுஷம் : நெருக்கடிகள் குறையும்.
கேட்டை : முயற்சிகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு -ராசி: _*
உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தில் கவனம் வேண்டும். தொழில் நுட்ப தேடல் அதிகரிக்கும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.
மூலம் : தீர்வு கிடைக்கும்.
பூராடம் : தேடல் அதிகரிக்கும்.
உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் -ராசி: _*
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்பு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.
உத்திராடம் : மந்தத்தன்மை குறையும்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : வாய்ப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் -ராசி. _*
விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். சங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
அவிட்டம் : மதிப்பு மேம்படும்.
சதயம் : திருப்தியான நாள்.
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் -ராசி: _*
மறைமுக வருமானங்கள் சிலருக்கு உண்டாகும். காலம் தவறிய உணவுகளை தவிர்ப்பது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நம்பிக்கையை உண்டாக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கவலைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை.
பூரட்டாதி : உணவுகளில் கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : நம்பிக்கை மேம்படும்.
ரேவதி : குழப்பங்கள் நீங்கும்.
*┈┉┅━•• ••━┅┉┈*