விவசாய வினாத்தாளினை வெளியிட்ட ஆசிரியர் கைது!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் விவசாயம் கற்பிக்கும் அரசாங்கப் பாடசாலையின் ஆசிரியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அம்பாறை பிரதேசத்தில் உள்ள பிரபல பொதுப் பாடசாலை ஒன்றின் உயர்தர விவசாய ஆசிரியர் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு. நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

விசாரணையில் ஈடுபட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், 52 வயதான குறித்த ஆசிரியரின் வீட்டில் அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளைக் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் தனியார் ஆசிரியர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளின் முதலாம் பாகத்தை சந்தேகநபர் ஜனவரி 8ஆம் திகதியும், இரண்டாம் பாகம் ஜனவரி 10ஆம் திகதியும் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews