
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பாடசாலையில் இடம்பெற்ற இவ் திருட்டுச்சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றையதினம் (14.01.2024) காலை 10.00 மணியளவில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலமையில் பொலிஸ் சார்ஐன்களான திசாநாயக்க (37348) , ஜெயவர்த்தன (35436) , திலிப்ப (61461) மற்றும் பொலிஸ் கொஸ்தபர்களான உபாலி (60945) , தயாலன் (91792) , ரணில் (81010) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரினால் விசாரனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணோளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தினர். இதன் போது கடந்த வெள்ளிக்கிழமை (12.01.2023) மதியம் 3.29 மணியளவில் ஒருவர் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது. சிசிரிவி காட்சியின் உதவியுடன் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் குறித்த தொலைக்காட்சியினை விற்பனைக்கு வழங்கியமை தெரியவந்தமையினையடுத்து சுமார் 8 மணிநேர குறுகிய நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர்.
வவுனியா சுந்தரபுரம் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்