
வவுனியாவில் ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றது.
இதேவேளை வவுனியா பொலிஸ் நிலையத்திலும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இன்று (15.01.2024) காலை 09.00 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

இவ் பொங்கல் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வவுனியா நகர் பிரதேசங்களை சேர்ந்த சமூதாய பொலிஸ் பிரிவின் உறுப்பினர்கள் , வர்த்தகர்கள் , கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்