நாளைய தினம் புதன்கிழமை 17.01.2023 அன்று மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்-நரேந்திரன் Sir தலைமையில் குருதிக்கொடை முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இரத்தவங்கியில் O Positive வகை குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நற்பணி ஏற்பாடுசெய்யப்பட்டு வைத்தியர்,வைத்தியசாலை ஊழியர்கள், (PHI) ஆகியோர் குருதித்தானம் வழங்கவுள்ளார்கள்.
நீங்கள் வழங்கும் குருதி யாரோ ஒருவரின் உயிரை நிச்சயமாக காக்கப்போகின்றது என்பதனால் கடவுள் நம்பிக்கையுள்ள, மனிதநேயமுள்ள இளைஞர் -யுவதிகளின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
50 Kg நிறைக்கும் 18 வயதுக்கும் மேற்பட்ட யாரும் முன்வரலாம்.வைத்திய பரிசோதனையின் பின்பே குருதித்தானம் வழங்க நீங்கள் தகுதியுடையவரா என தீர்மானிக்கப்படுவீர்கள்.
20 தடவை குருதிக்கொடை வழங்கிய அனுபவத்தின் அடிப்படையில் எந்தவித பக்கவிளைவுகளும் அற்ற நற்பணி என உறுதியாக கூறுவதாக மருதங்கேணி சுகாதாரா பரிசோதகர் நற்குணராஜா-நிருபன் தெரிவித்துள்ளார்.
விரும்பியவர்கள் நாளை 8 மணி தொடக்கம் 11 மணிவரை வைத்தியசாலை, மருதங்கேணிக்கு சமூகம் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”