
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும்பெப்ரவரி மாதம் 23 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வுசெய்யும் விஜயமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்விஜயத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார் , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), நெடுந்தீவு பிரதேச செயலர் எப்.சி. சத்தியசோதி, யாழ் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மற்றும் கடற்படை உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.
குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து கடற்படை படகு மூலம் கச்சதீவு சென்ற குழுவினர் அங்கு திருவிழாவிற்கு வரும் பக்தர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எடுக்கவுள்ள விடயங்களை ஆய்வு செய்து சென்றமை குறிப்பிடத்தக்தாகும்.