
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் பின் பொங்கல் தின சிறப்பு நிகழ்வாக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வும் தனிமனிதன் பெரிதும் மகிழ்ச்சியாக இருப்பது அலுவலக சூழலா அல்லது குடும்ப சூழலா எனும் பட்டிமன்றம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.