
இரவு கொத்து ரொட்டி சாப்பிட்டுவிட்டு தூங்கிய பெண்ணொருவர் காலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரண – வல்பிட்ட, பின்னகொலஹேன பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய திலினி மதுஷிகா என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் மூன்று வருடங்களாக அவரது உடல் பருமன் அதிகரித்து, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,
தூங்கும் போது ஆக்சிஜன் வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்துமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இரவு தனது கணவருடன் வெளியே சென்று,
கொத்து சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து வழக்கம் போல் ஆக்சிஜன் வழங்கும் இயந்திரத்தை அணிந்து தூங்கியுள்ளார்.
மறுநாள் அதிகாலை அப்பெண் எழுந்திருக்காத நிலையில், குறித்த பெண்ணின் கணவர் பெண்ணை ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.