வடக்கு , கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா
கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த சில வாரங்களாக வடக்கு கிழக்கில் பெய்த பெரும்மழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1009 குடும்பங்களை சேர்ந்த 3120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.