
நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து நல்லதண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொண்ட சோதனையின் போது வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்து சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட 1000/= நாணய தாள்கள் மற்றும் 500/= தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.