
நேற்றையமுன் தினம் கிணற்றில் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பங்குரு வீதி, வட்டு தென்மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இராசு (வயது 68) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் குளித்துக்கொண்டு இருக்கும்போது கால் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது