
நெடுந்தீவு பகுதியில் கஞ்சாவுடன் சந்தேகபர் ஒருவர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து ஒரு கிலோ 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.