யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறவுள்ள முக்கிய மாநாடு

வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் FiTEN Yarl 2024 மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) காலை-09.30 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது.
எமது பிரதேசத்தில் வளர்ந்து வரும் தொழில் முனைவோரை வலுப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களை வளர்த்தல் எனும் தொனிப்பொருளில் இம் மாநாடு நடாத்தப்படவுள்ளது.
உள்ளூர் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மற்றும் தமிழ்நாட்டில் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தல், பல வெற்றிபெற்ற தொழில் வல்லுனர்களின் தொழில் அனுபவ மற்றும் அறிவுப் பகிர்வுகள் என்பவற்றுடன் உள்ளூர் தொழில் முனைவோருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் தொழில் முனைவோருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் தொழில் முனைவோருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தல் ஆகியன இம் மாநாட்டின் நோக்கங்களாகும்.
இதேவேளை,  யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மற்றும் துறைத்  தலைவர்களுடன், அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான நட்புறவுச் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (18.01.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews