தென்னிலங்கையில் பரபரப்பு

குருணாகல், நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு கடும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, ​​பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதனால் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பொலிஸ் நிலையத்தின் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் சொத்துக்களுக்கும் இக்குழுவினர் சேதம் விளைவித்துள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்றிரவு நாரம்மல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிவில் உடையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், அந்த உத்தரவை மீறி லொறியின் சாரதி ஓட்டிச் சென்றதையடுத்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் லொறியை துரத்திச் சென்று லொறியை நிறுத்தியுள்ளனர்.

சாரதியை பயமுறுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் தனது பணித்துப்பாக்கியை எடுத்தபோது அது இயங்கி துப்பாக்கி சூட்டிற்கு இழக்காகி லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews