உகண்டாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு துப்பாக்கி வேட்டு முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கம்பாலா நகரை சென்றடைந்த ஜனாதிபதியை உகண்டாவின் வெளிவிவகார அமைச்சர் ஓரியெம் ஒகெல்லோ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் கென்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கனகநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
சிவப்பு கம்பளம் மற்றும் அரச வரவேற்புடன் கூடிய இந்த வரவேற்பு இலங்கைக்கும் உகண்டாவுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை வெளிப்படுத்தியது.
உகண்டாவின் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.