
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோயாளர்கள் அதிகரித்த ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளுக்கும் சுகாதார அதிகாரிகள், நல்லூர் பிரதேசசெயலக உத்தியோத்தர்கள் , சமூக அமைப்புபிரதிநிதிகள் மற்றும் பொலிஸார் விஜயம் மேற்கொண்டு நுளம்பு உற்பத்தியாவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வீட்டின் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு நுளம்பு உற்பத்தியாவதற்கு ஏதுவாக தண்ணீர் தேங்கி நிற்ககூடிய பொருட்களை இனங்கண்டு வீட்டு உரிமையாளர்கள் உதவியுடன் அகற்றிவருகின்றனர் .

குறித்த நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவல் தொடர்பாக சுகாதாரத்துறையினரால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை , வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
