
.வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்.பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய FiTEN Yarl 2024 மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) காலை-09.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது.

எமது பிரதேசத்தில் வளர்ந்து வரும் தொழில் முனைவோரை வலுப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களை வளர்த்தல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் வட அமெரிக்க தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான பாலா சுவாமிநாதன், முன்னாள் தலைவரான கால்டுவெல் வேல்நம்பி, fiten அமைப்பின் தலைவரான கௌதம் ராஜன், ஒருங்கிணைப்பாளர்களான ஷான் நந்தகுமார், பார்த்தீபன் பரஞ்சோதி மற்றும் yarl it hub இன் ஒருங்கிணைப்பாளரான சயந்தன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்ததர் சிறீ சற்குணராஜா மற்றும் UBL இயக்குனரான ஈஸ்வரமோகன், அமெரிக்க தொழிலதிபரான ராஜ் ராஜரத்தினம் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
உள்ளூர் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவின் தமிழ்நாட்டில் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தல், பல வெற்றிபெற்ற தொழில் வல்லுனர்களின் தொழில் அனுபவ மற்றும் அறிவுப் பகிர்வுகள் என்பவற்றுடன் உள்ளூர் தொழில் முனைவோருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் தொழில் முனைவோருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் தொழில் முனைவோருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் இம்மாநாடு இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.