
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் வெள்ளிக்கிழமை(19) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் மக்கள் மீது கடுமையாக தாக்கி விபத்தை ஏற்படுத்திய பேருந்தையும்,அதன் சாரதியையும் காப்பாற்றிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.