யாழ்ப்பாண மாஸ்ரேர்ஸ் பிரிமியர் லீக் 2024 பருவகாலம் முதலாம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலமெடுக்கும் நிகழ்வு மருதனார் மடம் ஹரி கொட்டேலில் 18.01.2024 மாலை 6 மணியளவில் தலைவர் ம. சிவரூபன் தலைமையில் இடம்பெற்றது.
முதலாவது பருவ காலத்திற்காக பத்து அணிகளுக்கான 200 வீரர்கள் ஏலமிடப்பட்டனர். அதவர்களில் 150 வீரர்கள் 10 அணிகளாலும் கொள்வனவு செய்யப்பட்டார்கள்.
கிங்ஸ்11, அரியாலை கில்லாடிகள்100, சங்கானை டொமினேரஸ், சுழிபுரம் றைனோஸ், கள்ளு வறியர்ஸ், வறாகி சுப்பர் கிங்ஸ், சிறிமுருகன் யுனைரயிட், கொக்குவில் ஸ்ரார், காளி கிங்ஸ், றைசிங் ஸ்ரார். ஆகிய அணிகள் இந்த பருவ காலத்தில் மோதவுள்ளன.
அணிக்கு இரு வீரர்கள் தக்கைவைக்கப்பட்ட நிலையில் ஏனைய வீரர்களுக்கான ஏலமே இடம்பெற்றது.
டேஸ்மன் 1600 புள்ளிகளுக்கு சுழிபுரம் றைனோஸ் அணியினால் வாங்கப்பட்டார்.
அதை தொடர்ந்து கொக்குவில் ஸ்ரார் அணியினால் 1600 புள்ளிகளுக்கு மயூரனும் கொள்வனவு செய்யப்பட்டார்.
1500 புள்ளிகளுக்கு பிரகாஸ் ரைசிங் ஸ்ரார் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டதோடு அதிக புள்ளிகளுக்கு ஏலம் போன வீரர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்.
குறித்த போட்டித் தொடர் மாசி மாதம் 4ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 17 ம் திகதி நிறைவடையவுள்ளதோடு, இந்த போட்டியானது பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதி நாள் அரை இறுதியை தொடர்ந்து இறுதிபோட்டியும் நடைபெற. உள்ளதோடு காங்கேசந்துறையில் போட்டிகள் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.