ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்ததை அடுத்து,
தம்மிக்க பெரேரா தனது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடத் தயார் என அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் மொட்டு கட்சியினால்
10 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அந்த 10 நிபந்தனைகளையும் நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ஏப்ரல் முதல் வாரத்தில் தெரிவிக்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ள நிலையில் தீர்மானம் எடுப்பதற்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுனவும் கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.