
நாரம்மலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் கான்ஸ்டபிளும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் நேற்று (19) மாலை குருநாகல் நீதாவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிவில் உடையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் லொறியொன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளவேளை
உத்தரவை மீறி பயணித்த லொறியை பின்தொடர்ந்த பொலிஸார், தம்பலஸ்ஸ பகுதியில் அதனை நிறுத்தியுள்ளனர்.
அத்துடன், லொறி சாரதியின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்தபோது அது இயங்கியுள்ளது.
இதனையடுத்து, அலவ்வ பகுதியை சேர்ந்த 40 வயதான லொறி சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்