
இலங்கை மின்சார சபையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
சுகயீன விடுமுறையை பதிவு செய்து, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (19) இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இலங்கை மின்சார சபையின் காசாளர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.