
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு மற்றும் மத்திய செயற்குழு இன்று திருகோணமலையில் கூடியுள்ளதுடன் பொதுக்குழுவில் இருந்து 325 பேரும், மத்திய செயற்குழுவில் இருந்து 50 பேரும் இணைந்து இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.