இன்று மாலை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் எதிர்வரும் 27.01.2024 நண்பகல் முதல் 31.01.2024 வரை மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
-நாகமுத்து பிரதீபராஜா-