
சமுர்த்தி திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெற்ற 16 ஆயிரத்து 146 பேருக்கு ஜனவரி முதல் விசேட உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர்
ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் மாவட்டச் செயலாளர்கள் மூலம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரிவெனா, குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.