
எதிர்வரும் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இதன் ஆரம்பகட்டமாக இன்று(23) பிற்பகல் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கூறினார்.