கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் 187 கிராம் ஹெரோயின், 126 கிராம் ஐஸ், 14 கிலோ 700 கிராம் கஞ்சா, 136 மாத்திரைகள், 148 கிராம் மாவா மற்றும் 102 கிராம் மதன மோதக உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களுள் 07 சந்தேக நபர்களுக்கான அழைப்பாணையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 03 சட்டவிரோத சொத்து விசாரணைகள் மற்றும் 17 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 28 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 322 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 42 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 243 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.