வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மரம் நடுகை விழா இன்று காலை 10:30 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்
செ.சுபச்செல்வன் தலமையில் இடம் பெற்றது
இதில் முதல் நிகழ்வாக விருந்தினரதகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மங்கள சுடர்களினை வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சி.சத்தியசீலன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செ.சுபச்செல்வன், சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி அருந்தவம் செந்தூரன்,
கிராம சேவகர் நி.விமல்சினி,
அபிவிருத்தி உத்தியோகத்தர் கை.தீபா,
தும்பளை மனோன்மணி அம்மன் ஆலய தலைவர் ம பகீரதன் இந்து கலாசார அலுவலர் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து தலமை உரையை வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செ.சுபச்செல்வன், பிரதம விருந்தினரும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சி.சத்தியசீலன், இன்றைய மரம் நடுகைக்கான கொடையாளரும் , green layer சர்வதேச நிறுவனத்தின் தலைவருமான பா.சசிகுமார் தும்பளை மனோன்மணி அம்மன் ஆலய தலைவர் ம.பகீரதன் ஆகியோர் ஆற்றினர்.
தொடர்ந்து விருந்தினர்களால் ஆலய சூழலில் மரக்கன்றுகள் நாட்டி வைத்தனர்.
இதில் தும்பளை தெற்கு கிராம மக்கள், தும்பளை தெற்கு மனோன்மணி அம்மன் ஆலய தலைவர் நிர்வாகிகள, வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.