300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் தீயிட்டு அழிக்கப்பட்டது.
சென்ற வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , நீதிமன்ற பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இவை எரிக்கப்பட்டன.
மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.